காலாண்டு, அரையாண்டு தேர்வு தேதிகள் அறிவிப்பு வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை

2025–26ம் கல்வி ஆண்டுக்கான பள்ளி நாட்காட்டி வெளியீடு

சென்னை: 2025–26ம் கல்வி ஆண்டுக்கான பள்ளி நாட்காட்டியை தமிழக பள்ளிக் கல்வித் துறை இன்று வெளியிட்டது. இதில், பள்ளிகள் திறக்கும் தேதி, விடுமுறை நாட்கள், தேர்வுத் தேதிகள் மற்றும் முக்கிய விழாக்கள் குறித்த விபரங்கள் அடங்கியுள்ளது.

அதன்படி, 2025–26ம் கல்வியாண்டில் மொத்தம் 210 வேலைநாட்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கல்வித் துறை அறிவித்துள்ளது.

இக்கால அட்டவணை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்திற்குப் பயனுள்ளதாக இருக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், முன்னோக்கிய திட்டமிடலுக்கான முக்கிய வழிகாட்டியாகவும் பயன்படும் எனத் துறையினர் தெரிவித்துள்ளனர்

2025-26 பள்ளி நாட்காட்டி

2025–26ம் கல்வியாண்டில், ஆண்டு முழுவதும் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளும் பள்ளி விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த ஆண்டிற்கான காலாண்டுத் தேர்வுகள் செப்டம்பர் 18ம் தேதி தொடங்கி செப்டம்பர் 26ம் தேதி வரை நடைபெறும் என கல்வித்துறை தெரிவித்துள்ளது.

காலாண்டு விடுமுறை காலாண்டுத் தேர்வுகள் முடிந்த பிறகு, செப்டம்பர் 29ம் தேதி முதல் காலாண்டு விடுமுறை தொடங்குகிறது. இந்த விடுமுறை அக்டோபர் 5ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த இடைவேளையில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி போன்ற முக்கிய விழாக்களுக்கான விடுமுறைகளும் அடங்கியுள்ளது
அரையாண்டுத் தேர்வுகள் 2025ஆம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதி தொடங்கி டிசம்பர் 23ம் தேதி வரை நடைபெறும்.
அரையாண்டு விடுமுறை டிசம்பர் 24ம் தேதி முதல் 2026ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதி வரை மொத்தம் 12 நாட்கள் அரையாண்டுத் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுகள் மற்றும் அதனுடன் இணைந்த விடுமுறைகளுக்கு அப்பாலான முக்கிய விழா விடுமுறைகளும் 2025–26ம் கல்வியாண்டு நாட்காட்டியில் இடம்பெற்றுள்ளன.

பொங்கல் விடுமுறை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2026ஆம் ஆண்டு ஜனவரி 14 முதல் ஜனவரி 18 வரை (மொத்தம் 5 நாட்கள்) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஆண்டு இறுதித் தேர்வுகள் இந்த கல்வியாண்டுக்கான முக்கியமான ஆண்டு இறுதித் தேர்வுகள் 2026 ஏப்ரல் 10ம் தேதி தொடங்குகின்றன.
கடைசி வேலைநாள் அதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 24ம் தேதி கல்வியாண்டின் கடைசி வேலைநாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறை ஏப்ரல் 25ம் தேதி முதல் அடுத்த கல்வியாண்டுக்கான கோடை விடுமுறை தொடங்கும் என கல்வித் துறை அறிவித்துள்ளது.

About the author

KANNAN V
I'm Kannan—Founder of Kalvi World Official, Making Learning Easy, Tech-Powered, and Inspiring for Everyone.

Post a Comment

Thank you for your comment! It's Encourage to Our Team!.