10TH TAMIL MEMORY POEMS

இயல் 1

மொழி, மனிதம் – அமுத ஊற்று

அன்னை மொழியே
அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே! முன்னைக்கும் முன்னைமுகிழ்த்த நறுங்கனியே! கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில் மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!
தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே! இன்னறும் பாப்பத்தே! எண்தொகையே! நற்கணக்கே! மன்னுஞ் சிலம்பே! மணிமே கலைவடிவே! முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!
– பாவலரேறு பெருஞ்சித்திரனார்

இயல் 2

காலக்கணிதம்
மாற்றம் எனது மானிடத் தத்துவம்; மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்! எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை என்ப தறிந்து ஏகுமென் சாலை! தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்: தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்! கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க! உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது; நானே தொடக்கம்; நானே முடிவு: நானுரைப் பதுதான் நாட்டின் சட்டம்!
– கண்ணதாசன்

இயல் 3

பண்பாடு – கூட்டாஞ்சோறு

காசிக்காண்டம்
விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின் வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல் திருந்துற நோக்கல் வருக என உரைத்தல் எழுதல் முன் மகிழ்வன செப்பல் பொருந்து மற்றுஅவன் தன்அருகுற இருத்தல் போமெனில் பின் செல்வதாதல் பரிந்துநன் முகமன் வழங்கல் இங்வொன்பான் ஒழுக்கமும் வழிபடும் பண்பே
– அகத்திராம பாண்டியர்

இயல் 4

கல்வி – மணற்கேணி

திருவிளையாடற் புராணம்
புண்ணியப் புலவீர் யான் இப்போழ்து இடைக் காடனார்க்குப் பண்ணிய குற்றம் எல்லாம் பொறுக்க எனப் பரவித் தாழ்ந்தான் நுண்ணிய கேள்வி யோரும் மன்னநீ நுவன்ற சொல்லாம் தண்ணிய அமுதால் எங்கள் கோபத்தீத் தணிந்தது என்னா.
– பரஞ்சோதி முனிவர்

இயல் 5

கலை, அழகியல், புதுமை – நிலாமுற்றம்

கம்பராமாயணம்
தண்டலை மயில்கள் ஆடத் தாமரை விளக்கம் தாங்கக் கொண்டல்கள் முழவின் ஏங்கக் குவளைகண் விழித்து நோக்கத் தெண்டிரை எழினி காட்டத் தேம்பிழி மகர யாழின் வண்டுகள் இனிது பாட மருதம்வீற் றிருக்கு மாதோ.
வெய்யோஒளி தன்மேனியின் விரிசோதியின் மறையப் பொய்யோஎனும் இடையாளொடும் இளையானொடும் போனான் மையோமர கதமோமறி கடலோமழை முகிலோ ஐயோஇவன் வடிவென்பதோர் அழியாஅழ குடையான்.
– கம்பர்

இயல் 6

நாகரிகம், நாடு, சமூகம் – விவசாயம்

சிலப்பதிகாரம்
தூசும் துகிரும் ஆரமும் அகிலும் மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும் அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியா வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும்; பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு கூலம் குவித்த கூல வீதியும்
– இளங்கோவடிகள்
முத்தொள்ளாயிரம்
அள்ளல் பழனத்(து) அரக்காம்பல் வாயவிழ வெள்ளம்தீப் பட்ட(து) எனவெரீஇப் புள்ளினம்தம் கைச்சிறகால் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ நச்சிலைவேல் கோக்கோதை நாடு.
– சேரநாடு

இயல் 7

தேம்பாவணி
நவமணி வடக்க யில்போல் நல்லறப் படலைப் பூட்டும் தவமணி மார்பன் சொன்ன தன்னிசைக்கு இசைகள் பாடத் துவமணி மரங்கள் தோறும் துணர்அணிச் சுனைகள் தோறும் உவமணி கானம்கொல் என்று ஒலித்து அழுவ போன்றே.
– வீரமாமுனிவர்
10th Tamil Memory Poems


About the author

KANNAN V
I'm Kannan—Founder of Kalvi World Official, Making Learning Easy, Tech-Powered, and Inspiring for Everyone.

إرسال تعليق

Thank you for your comment! It's Encourage to Our Team!.