12th Tamil - Public Exam 2025 Important Questions

12th Tamil - Public 2025 Important Questions

12th Tamil - Public 2025 Important Questions

வகுப்பு : 12th Tamil

பாடம்: தமிழ்

பகுதி 1 ஒரு மதிப்பெண் வினாக்கள்

வினா எண் - 15 முதல் 18 (3×2=6)

இரண்டு மதிப்பெண் வினக்களுக்கான விடைகள்

  1. கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட தமிழின் துணை வேண்டும் என்கிறார்?
  2. நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது' விளக்கம் தருக
  3. எதிர்பாராத நிகழ்வுகளை ஜலாலுத்தீன் ரூமி எவ்வாறு உருவகப்படுத்துகிறார்?
  4. நிலையாமை குறித்து, சவரி உரைக்கும் கருத்து யாது?
  5. வசனம், கவிதை வேறுபாடு தருக
  6. கலிவிழா, ஒலிவிழா விளக்கம் தருக
  7. தருமமிகு சென்னையில் கந்த கோட்டத்துள்வளர் தலமோங்கு கந்தவேளே"
  8. தொடருக்குப் பதவுரை எழுதுக
  9. எண்வகை மெய்ப்பாடுகள் யாவை?
  10. ஒருமுக எழினி, பொருமுக எழினி - குறிப்பு எழுதுக?
  11. செவியறிவுறூஉ துறையை விளக்குக?
  12. இறைமகனின் இன்னலைக் கண்டு மக்கள் எவ்விதம் புலம்பினார்?

வினா எண் - 19 முதல் 21 (2×2=4)

இரண்டு மதிப்பெண் வினக்களுக்கான விடைகள்

  1. நடை அழகியல் பற்றித் தொல்காப்பியம் கூறும் கருத்தைக் குறிப்பிடுக
  2. புக்கில், தன்மனை - சிறுகுறிப்பு எழுதுக
  3. அக்காலத்து கல்வி முறையில் மனனப் பயிற்சிக்கு உதவிய நூல்கள் எவை?
  4. பின்னணி இசை படத்தின் காட்சியமைப்புக்கு எவ்வாறு உயிரூட்டும்? சான்று? தருக
  5. பருவத்தே பயிர் செய் நேர மேலாண்மையை பொருத்தி எழுதுக?
  6. தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்' நூல் பற்றிக் குறிப்பு வரைக?

வினா எண் - 22 முதல் 30 (7×2=14)

படிக்க வேண்டிய பக்க எங்கள்: 20, 44, 67, 70, 72, 100, 102, 104, 127, 154, 184, 185

  1. முடிந்தால் தரலாம், முடித்தால் தரலாம் வேறுபாடு
  2. திருவளர்செல்வன், திருவளச்செல்வன் சரியான தொடர் எது? காரணம்?
  3. ஒரு விகற்பம், பல விகற்பம் விளக்குக
  4. "ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும்" இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக
  5. சடாயுவை தந்தையாக ஏற்று, இராமன் ஆற்றிய கடமையை எழுதுக?
  6. மனத்திட்பம் அவசியமான பண்பு என்பதைக் குறள்நெறி நின்று விளக்குக.
  7. எங்கிருந்தோவருகிறது வண்ணத்துப் பூச்சி ஒன்று பறவைகளும் வரக்கூடும் நாளை - இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக?
  8. யானை புக்க புலம் போலத் தானும் கண்ணன் உலகமும் கெடுமே - உவமையையும் பொருளையும் பொருத்தி விளக்குக?
  9. குகனோடு ஐவராகி, வீடணனோடு எழுவரான நிகழ்வினைச் சுட்டிக் காட்டுக
  10. நாட்டிய அரங்கின் அமைப்பை இளங்கோவடிகள் காட்சிப்படுத்தும் பாங்கு குறித்து உங்கள் கருத்தை எழுதுக?
  11. மயிலை சீனி, வேங்கடசாமி நினைவுச் சிறப்பிதழுக்குச் செய்திகள் தருக?
  12. பேரிடர் மேலாண்மை ஆணையம் விளக்கம்
  13. பண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியே இன்றைய கூட்டுக் குடும்பம் விளக்கம் எழுதுக?
  14. பேரிடர் மேலாண்மை ஆணையம் - விளக்கம் தருக
  15. மணலில் எழுதியது முதல் தற்காலம் வரைமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைத் தொகுத்துரைக்க;
  16. திரைப்படத்தின் காட்சியின் ஆற்றலை எடுத்துக்காட்டுடன் புலப்படுத்துக?
  17. வேளாண் மேலாண்மை குறித்து நீவிர் பரிந்துரை பலவற்றை எழுதுக?
  18. அணி இலக்கணம் (பொருள் வேற்றுமை அணி, ஏகதேச உருவக அணி, உவமை அணி, சொல் பொருள் பின் வரு நிலையணி, நிரல் நிறை அணி)
  19. திணை (பாடாண் திணை, பரிசில் துறை)
  20. பழமொழி வாழ்க்கை நிகழ்வில் அமைத்து (பக்க எண்: 103)
  21. தமிழாக்கம் (இயல் 1, இயல் 8 மிக முக்கியம்)
  22. நயம் பாராட்டல்

வினா எண் - 44 (கவிதை)

  1. தமிழின் சீரிளமைத் திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக?
  2. எச்.ஏ.கிருட்டிணனார் 'கிறித்தவக் கம்பரே' என்பதை நும் பாடப்பகுதி வ நிறுவுக.
  3. செய்ந்நன்றியறிதலே அறம் என்பதை வாயுறை வாழ்த்தின் துணைக்கொண்டு நிறுவுக.
  4. "அறிவுடைமை வாழ்வின் உயர்வுக்குத் துணை நிற்கும்" என்பதை வள்ளுவம் வழிநின்று நிறுவுக.

வினா எண் - 45 (உரைநடை)

  1. நெகிழி தவிர்த்து நிலத்தை நிமிர்த்து' என்னும் தலைப்பில் சுற்றுச்சூழல் ஆர்வலர் பசுமைதாசனாருடன் நீங்கள் நடத்திய கற்பனைக் கலந்துரையாடல் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
  2. குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் என்னும் பார் அமைப்பு கட்டமைக்கப்படுகிறது - எவ்வாறு? விளக்குக
  3. பண்டைக்காலக் கல்வி முறையில் ஆசிரியர் மாணவர்களுக்கிடையே நிகழ்ந்த கற்றல், கற்பித்தல் முறைகள் தொகுத்து எழுதுக?
  4. மயிலையார் ஓர் "ஆராய்ச்சிப் பேரறிஞர் என்னும் கூற்றினைச் சான்றுக கட்டுரையாக்குக:

வினா எண் - 46 (துணைபாடம்)

  1. மகாநடிகரைக் கண்ட பாலசந்திரனின் மனவோட்டத்தை நயத்துடன் எழுதுக.
  2. பாரதியின் கடிதம் வாயிலாக நீங்கள் அறிந்து கொண்ட மொழிப்பற்று, சமூகப்பற்று ஆகியவற்றை விவரிக்க.
  3. சங்ககால வரலாற்றை அறிந்துகொள்ள, புகளூர்க் கல்வெட்டு எவ்வகையில் துணைபுரிகிறது? விளக்குக.

About the author

KANNAN V
I'm Kannan—Founder of Kalvi World Official, Making Learning Easy, Tech-Powered, and Inspiring for Everyone.

إرسال تعليق

Thank you for your comment! It's Encourage to Our Team!.